மனநோயைச் சாதாரணமாக இரண்டு பெரும் வகைகளாகப் பிரிக்கலாம்
1. மனச் சீர்குலைவு உறவான நோய் (psychotic) (தீவிரமனநோய்)
உதாரணம் :- முரண் மூளைக் கோளாறு (schozophrenilc) பித்தவெறி மனச் சோர்பு மற்றும் மருபவி
2. மனச் சீர்குலைவற்ற நோய் :- (Non-psychotic illness) சிறு மனநோய்
உதாரணம் : ஆர்வக்கவலை, அலைகழிப்பு, வலுக்கட்டாய நிலை மற்றும் உண்பதில் சீர் குலைவுகள்.
மனச்சீர் குலைவுள்ள நோய்
இந்த வகை நோயாளிகள் உண்மை நிலையை உணரமுடியாமல் மற்றவர்களுக்கு முரணாக உலகைக் காண்பார்கள் மருட்சி, பொய் நம்பிக்கை, அடம், மாயக்காட்சிகளை இவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். இல்லாதவற்றைப் பார்ப்பார்கள், கேட்பார்கள், வாசனை நகர்வார்கள், ருசிப்பார்கள், உணர்வார்கள். வாழ்க்கைச் சூழ்நிலையின் பரிமாணத்தை ஒன்று குறைத்து நோக்கி குமைந்து போவார்கள் அல்லது பெருக்கிப் பார்த்து வீண்பெருமிதங் கொள்வார்கள்.
மனச்சீர்க் குலைவற்ற நோய்
சாதாரண வகை நடத்தைகள், உணர்வுகளை மிகவும் மிகைப் படுத்தி குமைவது இந்த வகை மனநோயின் அறிகுறிகளாகும். இத்தகு நோயாளிகள் அடக்க முடியாத கவலை, மன உளைச்சல், அச்சம், சோர்வு முதலியவற்றை அடைவார்கள். இத்தகு உணர்வுகள் இவர்களைத் தங்கள் தினசரி வேலைகளைச் சரிவர செய்ய முடியாமல் துன்புறுத்தும்.
மன நோய்க்கான காரணங்கள் என்ன ?
ஆன்மா, மனம் இவற்றின் தளர்ச்சியோ, மனத்திட்பம் இல்லாமையோ, பேய் பிடித்தல் போன்ற அதிக சக்திகளின் செயல்களோ மனநோயை உண்டாக்குவதில்லை.
மன நோயின் உண்மையான காரணங்களர் இன்னும் முழுமையாக தெரியவில்லை. புரிந்து கொள்ளப் படவுமில்லை. பெரும்பாளான ஆய்வாளர்கள், மூனையிலுள்ள ரசாயணங்களின் சமமின்மையே பெரும்பாலும் மனநோயை உண்டாக்குகின்றன என்ற முடிவுக்கு வந்துள்ளனர். சுற்றுச்சூழ்நிலையின் அழுத்தங்கள், மரபுவழிக் கூறுகள், உயிர்வேதியல் சமமின்மை அல்லது இக்கூறுகளின் கூட்டு இத்தகைய சமமின்மையைஏற்படுத்தக்கூடும்
No comments:
Post a Comment